சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 25ம் தேதி வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வை 6.30 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை,
கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தேர்வை சுமார் 40,000 பேர் எழுதினர். இது குறித்து சங்கர் ..எஸ். அகடாமி நிறுவன தலைவர் சங்கர் கூறியதாவது:

சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது. இல்லாத பட்சத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். அக்டோபரில் மெயின் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related