டி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தொடக்க கல்வி பட்ட யப் படிப்பில் (D.T.Ed) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக் கல்வி பட்டயப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு மே 31ம் தேதி முதல் ஜூன்
21ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்ற வகையில் www.tnscert.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் அவகாசம் வழங்கும் வகையில் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related