பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?

விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை புகார் எழுந்ததை அடுத்து மாவட்டம் முழுவதும் 122 அரிசி ஆலைகள், மொத்த, சில்லறை
கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு நடத்தி, 7 கடைகளில் சந்தேகமாக காணப்பட்ட அரிசிகளை கோவைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

 ஆய்வுக்குப்பின்னர் உணவுபாதுபாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி கூறு கையில், பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும். இதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 1 டம்பளர் தண்ணீரில் சிறிதளவு அரிசியை போட்டு பார்த்தால் பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அது தண்ணீரில் மிதக்கும்.


நல்ல அரிசியாக இருந்தால் மூழ்கிவிடும். சிறிதளவு அரிசியை தீயில் எரித்தால் பிளாஸ்டிக் அரிசி என்றால் பிளாஸ்டிக் வாசனை வரும். ஒரு கடாயில் சிறிதளவு அரிசியை போட்டு வறுத்தால் நல்ல அரிசாயக தெரியும். பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அது கடாயில் ஒட்டிக்கொள்ளும். எனவே பொதுமக்கள் ஒவ்வொரு அரிசி மூட்டைகளை வாங்கும்போதும் இவ்வாறு சோதனை செய்துகொண்டு பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Related