கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு!

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், முதல் நாளான இன்று, மாணவர் கள், புதிய வகுப்புக்கு மாற்றம் செய்யப்படுகின் றனர். பின்,அரசு மற்றும் அரசு உதவி பள்ளிக ளில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள், இன்றே வழங்கப்படுகின்றன.


அறிவுறுத்தல்


மேலும், 8ம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை களும் வழங்கபட உள்ளன.இவற்றை எல்லாம் உடனடியாக வழங்கும்படி, அரசு உத்தர விட்டு உள்ளது. இலவசங்கள் வினியோகத் திற்கு பின், பள்ளிகளுக்கு விடுமுறை விடப் படும். நாளை

முதல், வழக்கம் போல வகுப்பு கள் துவங்கும். தனியார் பள்ளிகளில், புதிய மாணவர்களை வரவேற்றும், புதிய வகுப்புக்கு மாறும் மாணவர் களை வாழ்த்தியும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல் நாள் என்பதால், மாணவர்கள், சீருடை அணிந்தே வர வேண்டும் என, பள்ளிகள் அறி வுறுத்தி உள்ளன.இதற்கிடையில்,ஓரிரு மாவட் டங்களில் மட்டும், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு விஷயத்தில், உள்ளூர் நிலவ ரத்திற்கு ஏற்ப, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என, அரசு ஏற்கனவே கூறியுள்ளது.


பழைய 'பஸ் பாஸ்'


'பள்ளி மாணவர்கள், புதிய, 'பஸ் பாஸ்' வழங்கப் படும் வரை, கடந்த ஆண்டு பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்யலாம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் பணி, இன்னும் துவங்கவில்லை. அதனால், மாணவர் கள், பழைய பஸ் பாசை பயன்படுத்த லாம் என, அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து

உள்ளனர்.பழைய பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, பஸ்களில் அனுமதிக்கும்படி, நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு


புதுச்சேரி:''வெயில் தாக்கம் குறையாததால், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டு, 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்,'' என, அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசித்த பின் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:

விடுமுறை விடாமல் பள்ளியை தொடர்ந்து நடத்தினால் தான், ஓராண்டு பாடங்களை நடத்தி முடிக்க முடியும். கடந்த ஆண்டு மழை பெய்யாததால், மழை விடுமுறை விடப்பட வில்லை. இந்த ஆண்டு, கனமழை இருக்கும் என, கூறப்படுகிறது.


விடுமுறை விட்டால், சனிக்கிழமை தோறும் பள்ளிகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருந்தும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், எம்.எல்..,க்கள் கோரிக்கை விடுப்பதாலும், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும், 12ல், பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related