வைகாசி விசாகம்.. கன்னியாகுமரி, தூத்துக்குடியில் ஜூன் 7ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் 7 ஆம் தேதி
கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அன்றைய தினம் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் சம்பந்தபட்ட மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது.

இந்த விடுப்பு செலவாணி முறிவுச் சட்டத்தின் படி பொது விடுமுறை நாள் அல்ல என்பதால் ஜூன் 7ல் உள்ளூர் விடுமுறைக்கு பதில் ஜூன் 10ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதேபோல் கன்னியாகுமரி வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூன்.7 உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ஜவான்.

Related