காரைக்கால் மாவட்டத்திற்கு 7-ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு பதில் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி.

காரைக்கால் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு
காரைக்கால் மாவட்டத்துக்கு 7-ம் தேதி பொதுவிடுமுறை விடப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளது.

 சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி இதுதொடர்பாக கூறியதாவது:
காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. பொதுமக்கள் இதற்கு அதிகம் பேர் வருவர் என்பதால், 7-ம் தேதி காரைக்கால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.


மேலும் 8-ம் தேதி அரசு ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். 7-ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு பதில் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றார் நாராயணசாமி.

Related