ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்!ஜூலை 1ஆம் தேதி முதல் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (Central Board of
Direct Taxes) தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு செலுத்துவதற்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. வருமான வரி செலுத்துவோர், ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில்வருமானவரி செலுத்த பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் விதி செல்லும். ஆனால் அது கட்டாயமில்லைஎன்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஆதார் எண் இல்லாதவர்கள் பான் எண்ணுடன் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. ‘ஆதார் எண் இல்லாதவர்களின் பான் எண் ரத்து செய்யப்படமாட்டாது. ஜூலை 1ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம்என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related