'அரசியல்வாதிகள் மாதிரி பேசறாங்களே!'-DINAMALAR

ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முன் வரிசையில், ஆசிரியர் சங்க மூத்த நிர்வாகிகள் அமர
வைக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், நிர்வாகிகளாக பலர் பதவியில் உள்ளனர்; முதலில் பேச, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.'மைக்' கிடைத்தால் போதும் என, ஒவ்வொருவரும், 'சப்ஜெக்டே' இல்லாமல், மணிக்கணக்கில் பேசினர். அவர்களின் பேச்சை நிறுத்த, அதிகாரிகளும், ஊழியர்களும் திணறினர். கூட்டம், அதிகாலை வரை நடந்தது. கூட்டம் முடியும் முன், நிர்வாகிகள் பலர் நடையை கட்டினர். இதை பார்த்த ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர், 'கட்சியில் இருக்கும் அமைச்சரே, 'சப்ஜெக்ட்' மட்டும் பேசுகிறார். ஆனால், சங்கம் நடத்தும் நிர்வாகிகள் மட்டும், இன்னும் அரசியல்வாதி மாதிரி மணிக்கணக்கில் பேசறாங்களே! இவங்க எப்போ மாறுவாங்க...' என, வேதனைப்பட்டார். மற்ற நிர்வாகிகளும், அதை ஆமோதித்தனர்.

Related