பி.எட்., பயிற்சி: ஆசிரியர்களுக்கு அரசு சலுகை

'அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு, தங்கள்
பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்கலாம்' என, அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் பிறப்பித்த உத்தரவு:
தொடக்க பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிக்கும் போது, அவர்களுக்கான பயிற்சியை, பணிக்காலமாக சம்பளத்துடன் மேற்கொள்ளலாம்.
தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, இந்த பயிற்சியை எடுத்து கொள்ளலாம். தாங்கள் படிக்கும் பல்கலையில் அனுமதித்த காலத்தில், பயிற்சியை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related