சீருடை பணியாளர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய பொதுத்தேர்வுக்கான,
'ஹால் டிக்கெட்' என்ற நுழைவுச் சீட்டு, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 13 ஆயிரத்து 137 இரண்டாம் நிலை காவலர்கள்; 1,015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள்; 1,512 தீயணைப்போர் பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை, ஜன., 23ல் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வில், முதன் முறையாக, திருநங்கைகளும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


இதற்கான எழுத்து தேர்வு, வரும், ௨௧ம் தேதி, தமிழகம் முழுவதும், 410 மையங்களில் நடக்கிறது. எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கான, ஹால் டிக்கெட், www.tnusrbonline.org என்ற இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 'விண்ணப்பதாரர்கள், தங்களின், விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related