*பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களின் நிறைவுரை விவரம் *

அதிகாலை 12:32 மணிக்கு ஆரம்பித்து 12:58 மணிவரை பேசினார்.

கல்வித்துறை செயலாளர் அவர்களை சரியாக தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்டு உள்ளதால்  பள்ளிக்கல்வி துறை வளரும்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்

தலைமைஆசிரியர் சிரமங்கள் குறைக்க
14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  பள்ளிக்கல்வித்துறை
வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது.

 மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்கக் கூட்டம் பள்ளி வளாகத்திலேயே (common prayer) நடைபெறும்..

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்

 ஸ்மார்ட் கார்டு  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும்.

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைபெறும்.

தனியார் பங்களிப்புடன் கழிப்பறை பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

வகுப்பறை சுத்தம் செய்ய இரு வகுப்பறைகளுக்கு ஒருவர் வீதம் 100 நாட்கள் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள்.

சென்னை, திருச்சியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லக்கட்டிடங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். மேலும் கோவை,மதுரை ஆகிய இடங்களில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும்.

ஆசிரியர்கள் பிரச்சனைகள் சார்ந்து அனைத்து ஆசிரியர்களும் AEEOவை தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்காக 5 பள்ளிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர்.

நிதி சார்ந்த கோரிக்கைகள் கல்வி மானியக் கூட்டத்திலும்ஊதியக்குழுவிலும் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்கள்.

எந்தவித புகாரும் இன்றி 4742 ஆய்வக உதவியாளர் நியமனங்கள் நடைபெற்றது போல ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு இவ்வாண்டு நடைபெறும்.

நீட் தேர்வுக்கு தாயாராகும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் பாடதிட்டம் மாற்றியமைக்கப்படும். கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்ட உள்ளது

பழுதடைந்த கணினிகளை பழுதுபார்த்து கணினி ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆழியாறு யோகா மையம் மூலம்
யோகா பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  அளிக்கப்படும்.

இந்தாண்டு முதல்
மாணவர் சேர்க்கை குறைபாடை நீக்கி அதிக மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

1 மாணவர்களுக்கு குறைந்த அளவில் மதிப்பெண் வைத்து பொதுத் தேர்வு நடத்தப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்

 அனைத்து வகைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள்.

போராட்டம் செய்யாமலேயே அனைத்து கோரிக்கைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்.

Related