தமிழக அரசுபள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக நிகழ் கல்வியாண்டிலே கொண்டுவர ஆசிரியர் சங்களுக்கு கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்

அரசுப்பள்ளி,மற்றும் அங்கு பயிலும் மாணவர்களின் வாழ்க்கைத்தரம்,
கல்வித் தரத்தை உயர்த்தும் 6அம்ச  கோரிக்கை:


1.) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).

2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிடப்பட்ட (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வரை) கணினி அறிவியல் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.   3.) கடந்த 11-ஆண்டுகளாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவிக்க வேண்டும். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.

4.) கணினி அறிவியலை பயிற்றுவிக்க ஒப்பந்த ஊழியர்களை தேர்வு செய்யாமல் தகுதிவாய்ந்த பி.எட். பட்டதாரிகளை பணிநியமனம் செய்திட வேண்டும்.

5.) கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்.

6.) அரசு பள்ளிகள் அனைத்திலும் (1ம் வகுப்பு முதல் - 12ம் வகுப்பு வரை)குறைந்த பட்சம் 20முதல் 40வரை கணினிகளைக் கொண்ட அதிநவீன கணினி ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும்

*தாய்மை உள்ளம் கொண்ட தாய் ஆசிரியர்கள் சங்கத்தின் உறவுகளே!*

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர அனைத்து சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்றி பள்ளி கல்வி அமைச்சரிடமும், பள்ளிக்கல்வி செயலாளர்களிடமும் ,முதலமைச்சரிடமும் வலியுறுத்துமாறும் மேலும் அனைத்து அரசு கலைக்கல்லூரி,நிர்வாகம் மற்றும் "தமிழகக் கல்வியாளர்கள்பேராசிரியர்களும் இதனை அரசுக்கு வலியுறுத்துமாறும் அன்போடு  நமது

*தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*®655/2014.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,

9626545446.

Related