TAM-NEWS

முதுநிலை பல் மருத்துவ படிப்பு 'கட் - ஆப் மார்க்' குறைப்பு

சென்னை: தேசிய அளவிலான முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்ணை, மத்திய சுகாதார
அமைச்சகம் குறைத்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, தேசிய அளவிலான கவுன்சிலிங் நடந்து வருகிறது. பொதுவாக, 'நீட்' தேர்வில் மாணவர் எடுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணில், பொது பிரிவினருக்கு, ௫௦ சதமானம், பிற ஒதுக்கீடு பிரிவினருக்கு, 40 சதமானம் என, 'கட் - ஆப்' கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.., உடன் ஆலோசித்த, மத்திய சுகாதார அமைச்சகம், இந்த கல்வியாண்டு முதல், முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்ணை குறைத்துள்ளது.
இது குறித்து, தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ''தேசிய அளவிலான பல் மருத்துவப் படிப்புகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்,
7.5 சதமானம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது பிரிவினருக்கு, 42.5 சதமானம், இட ஒதுக்கீடு

பிரிவினருக்கு, 32.5 சதமானமாக, 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படும்,'' என்றார்.

Related