ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநரின் சுற்றறிக்கை -5

ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டது.    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மே-13 அன்று சென்னையில் நடைபெற்ற  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை மாநாட்டில், முன்னுரிமை பட்டியலில் மீண்டும் பழைய முன்னுரிமையை வழங்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டதோடு, தலைமை செயலகத்தை முற்றகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது..

இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன்  மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் எஸ், கார்மேகம் ஆகியோர் மே-16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க  நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.

பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 256-ல் திருத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டதுஅதன்படி, தற்போது  மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிற ஆசிரியர் பணியிட மாறுதலில் பிண்கண்ட அடிப்படையில் முன்னுரிமை வழங்க  மே-22 தேதியிட்ட பள்ளிக்கல்வித்துறையின் திருத்தப்பட்ட அரசாணை (எண்.318) தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை விபரம்

-------------------------------

1. முற்றிலும் பார்வையற்றவர்கள்

2. இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள்

3. கடும் புற்றுநோய் பாதித்தவர்கள்

4. 50% மற்றும் அதற்கு மேல் பாதித்த உடல் ஊனமுற்றவர்கள்

5. 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியர் பணியாற்றிய ராணுவ வீரர்களின் மனைவியர்

6. விதவையர் மற்றும் மணமாகாத முதிர்கன்னியர்

7. 50% க்கு கீழ் பாதித்த உடல் ஊனமுற்றோர்

8. 5 வருடங்களுக்கு கீழ் ஆசிரியர் பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவியர்

9.  மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆசிரியர்களாக இருப்பவர்

10. ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள்

என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்க திருத்தப்பட்ட புதிய அரசாணையில் வகை செய்யப்பட்டுள்ளது.


Related