தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது.

இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

மீன்வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுதுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக தண்டபானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக கே.ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார், தூத்துகுடி ஆட்சியராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக சுரேஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்.
போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த சந்திரகாந்த் காம்ளே டுபிட்கோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக டேவிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை ஆட்சியராக இருந்த கருணாகரன் வேளான் கூடுதல் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகரமைப்பு திட்ட ஆணையரானார். ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி.நாயர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநரனார்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related