காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு 21–ந் தேதி நடக்கிறது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின் உறுப்பினர்
செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 13 ஆயிரத்து 137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்ய ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கு முன்னர், 2012–ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் 2 லட்சத்து 71 ஆயிரம் விண்ணப்பித்து இருந்தனர். மேற்கண்ட பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 21–ந் தேதி சென்னை உட்பட 32 மாவட்டங்களில் உள்ள 410 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்வதற்கு உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Related