அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவுக்கான புதிய ஆணைகள் சொல்வது என்ன..?

சென்னை: அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2 புதிய வரைவு விதிகளுடன் கூடிய
அரசாணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் சொல்லும் புதிய சாராம்சங்கள்:

- 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை அங்கீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

- விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது.
- அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

- தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது.

- விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண்துறை இயக்குனரின் ஒப்புதல் வேண்டும். ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

- ஆறு, கால்வாய் மற்றும் குட்டைகள் உள்ளிட்ட இடங்களை வீட்டுமனைகளாக மாற்றக்கூடாது.

- கோயில் நிலங்கள், வக்ஃபு வாரிய மற்றும் புறம்போக்கு நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது.

- உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை.

- ஒரு பகுதி விற்பனை செய்து வேறு பகுதி விற்பனை செய்யாவிட்டால் பத்திரப்பதிவு செய்யலாம்.

- சந்தை விலையை விட 3 சதவீத அபாரதத்துடன் புதிய விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

- மாநகராட்சிகளில் பத்திரப் பதிவு மேற்கொள்ள கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100
- நகராட்சிகளுக்கு கட்டணமாக ரூ.60.

- பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு கட்டணமாக ரூ.30-ம் வசூலிக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related