ஆன்லைனில்' மட்டுமே வாக்காளர் சேர்ப்பு

ஓட்டுச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சி மே 5 ல் தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி நடக்கிறது. இதில்
ஓட்டுச்சாவடிகளில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.
அந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்திற்கான விண்ணப்பங்களை 'ஆன்லைனில்' பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு இதுகுறித்த பயிற்சி மே 5ல் அளிக்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இத்திட்டம் முதற்கட்டமாக குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் மட்டும் செயல்படுத்தப்படும். தொடர்ந்து அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கொண்டு வரப்படும். உடனுக்குடன் 'ஆன்லைனில்' ஏற்றும்போது விண்ணப்பதாரர் முன்னிலையிலேயே சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும். இதனால் பிழைகள் குறையும்.இவ்வாறு கூறினார்.

Related