TAM-NEWS

பி.இ. மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்

இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான
ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மே 

1) முதல் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முகவரி www.annauniv.edu ஆகும். அவ்வாறு ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி..) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
2017-18 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.

முக்கியத் தேதிகள் குறித்த விவரம் ஆன்-லைன் பதிவு தொடக்கம் மே 1 ஆன்-லைன் பதிவுக்கு கடைசி நாள் மே 31 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 3 சமவாய்ப்பு எண் வெளியீடு ஜூன் 20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 22 கலந்தாய்வு தொடங்கும் நாள் ஜூன் 27.

Related