இனி சவுதியில் ‘வருமான வரி ’யே கிடையாதாம்.. மக்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் ஜாக்பாட்..! இனி சவுதியில் ‘வருமான வரி ’யே கிடையாதாம்.. மக்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் ஜாக்பாட்..!

சவுதி அரேபிய நிதி அமைச்சர் ஞாயிற்றுக்கீழ்மை சவுதி குடிமக்கள் மற்றும் சவுதி நிறுவனங்களுக்கும் இனி வருமான
வரி செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளார். இந்த எண்ணெய் வலம் அதிகம் கொண்ட நாட்டில் நிறுவனங்களும் தங்களது லாபத்தை அரசுக்குக் கணக்கு காடி வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்து இருப்பது உலக நாடுகளை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது.
2014-ம் ஆண்டின் இடையில் ஏற்பட்ட மாற்றம் 2014-ம் ஆண்டின் இடையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தால் சவுதியின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. புதிய வரிகள், தனியார் மையமாக்கல், மாற்றப்பட்ட முதலீட்டு உத்திகள் மற்றும் அரசு செலவினங்களை அறிவித்து அதன் மூலம் கட்டுப்படுத்தியது
சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதி முகமது அல்-ஜாடன் அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் லட்சிய சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக வரி விதிக்கப்படும். சவுதி நாட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வருமானம் மற்றும் லாபத்தில் இருந்து வரி செலுத்த தேவையில்லை என்றும் அறிவித்தார்.
மதிப்புக்கூட்டு வரி உயர்வு 2018-ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரி எனப்படும் வாட் வரியை உயர்த்தும் எண்ணம் இருப்பதாகவும் ஆனால் அதுவும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் கீழ் வரும் 6 அரபு முடியாட்சி நாடுகளில் வரும் ஆண்டு முதல் 5 சதவீதம் வரை மதிப்புக்கூட்டு வரி உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் எண்ணெய் இல்லாத வருவாயினை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.
வல்லுநர்கள் கருத்து ஆனால் இது குறித்துச் சில நாடுகளின் வல்லுநர்கள் ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளிலும் வரி அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர். வரி மற்றும் வரி விதிப்பு குறைந்த இருக்கும் பகுதிக்குள் மற்றும் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகளில் உள்ள சிரமங்கள் ஆகியவை நிர்வாக உட்கட்டமைப்பில் சிக்கலான சூழலை உருவாக்கும் அதனால் ஒரே நேரத்தில் எல்லா நாடுகளிலும் மதிப்புக்கூட்டு வரி உயர்வு சாத்தியமில்லை என்று கூறப்படுகின்றது.


Related