அரசுப் பள்ளி ஆசிரியரின் - உலக சாதனை!!


சிறு சிறு முயற்சியும் உலக சாதனையாகலாம்...

ஆசிரியர் தினத்தன்று அறப்பணி செய்யும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் கூற நான் செய்த சிறு முயற்சி இன்று "உலக சாதனையாக" அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்கள் பள்ளி ( ...நி.பள்ளி, இராஜாகுப்பம், குடியாத்தம், வேலூர் ) மைதானத்தில் மிதிவண்டி ஓட்டிய படியே "சாவித்ரிபா பூலே, டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் அப்துல் கலாம்" ஆகிய மூவரின் படங்களை சுமார் 1:30 மணி நேரத்தில் தொடர்ந்து மிதிவண்டியில் பயணித்த படியே வரைந்து முடித்தேன். இந்த சிறு முயற்சி மூலம் ஆசிரியர் பணியை அறப்பணியாய் செய்யும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் கூற முயற்சித்தேன். இந்த முயற்சி இன்று DBC world records அமைப்பின் மூலம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனது முயற்சியை உலக சாதனை பெறும் அளவிற்கு ஊக்கமும், வழிகாட்டுதலும் தந்த அன்பு தோழர் SURIYA ( URF WORLD RECORD JURY CALCUTTA, TAMILNADU ) அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

(பள்ளியில் பல தடைகளை தாண்டி செய்த முயற்சி தற்போது - உலக சாதனையாக)

- தெருவிளக்கு கோபிநாத்
7598479285
Related