ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது. ரேஷன் ஊழியர்களுக்கு, மாதத்தின் முதல், இரண்டு
ஞாயிற்று கிழமை வேலை நாள்.
அதற்கு மாற்றாக, அந்த வார வெள்ளிக் கிழமை விடுமுறை. ஏப்., 1ல் இருந்து, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், சமூகநலக் கூடங்களில், மக்களை அழைத்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அந்த பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். புதிய ரேஷன் கார்டு வாங்கியதும், கடைக்கு சென்று, ஊழியரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்ததும் கார்டுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., வரும். பின், வழக்கம் போல், கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். இதற்காக, ஏப்., 15 வரை, ஊழியர்கள், விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related