பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட, எழுத்துத் தேர்வு முடிவுகள், நேற்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.
அதன் அடிப்படையில், காலியிடங்களுக்கேற்ப,1 : 5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரி பார்ப்புக்கான பட்டியல், முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.

இப்பட்டியல், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்; நடைமுறையில் உள்ள இன சுழற்சி; விண்ணப்பதாரர்கள் அளித்த விபரம் ஆகியவற்றின் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

Related