பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் பணி, வாக்காளர்களை சரிபார்க்கும் பணி ஆகியவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வழக்கம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து
தேர்தல்கள் வரை ஒவ்வொரு தேர்தல் பணிகளிலும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என காஷ்மீர் முதல்-மந்திரி மெஹபூபா உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சையத் அல்தாப் புகாரி இதுகுறித்து கூறுகையில்காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் மாநில அரசு ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் அவர்கள் வேலையை செய்தால் மட்டும் போதும்.

பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களிலும் இது கடைபிடிக்கப்படும். ஆசிரியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதவிர அக்கவுண்ட் பணிகள் மற்றும் பள்ளி கட்டிட வேலைகளில் சூப்பர்வைசர்களாக ஆசிரியர்கள் ஈடுபடுவதும் தடுக்கப்படும்என்றார்.

Related