நீட் தேர்வு விண்ணப்பம் தொடர்பான வழக்கு - மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

     நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை ஏற்பது  தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக சேலம் சீரங்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த +2 மாணவன் தேசியன் என்பவர்  தாக்கல் செய்த மனுவில்,  ’’கடந்த 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்பதோடு அதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இந்தாண்டிற்கான நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விலிருந்து  விலக்கு அளிக்ககோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை குடியரசு தலைவர் ஒப்புதல் தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வந்ததால் நான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் நான் தாமதமாக விண்ணப்பித்தால் விண்ணப்பித்தை ஏற்க உத்தரவிட வேண்டும்" என  மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு இன்று  நீதிபதி கிருபாகரன் மீது விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மார்ச் 20 ஆம் தேதிகுள்  பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை  அதே தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.

Related