முனைவர் பட்டம் பெற்றவர்களின் விவரங்களை 2 மாதங்களுக்குள் தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் !

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
முனைவர் பட்டம் பெற்றவர்களின் தகவல்கள்அனைத்தையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டே யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.எனினும், யுஜிசியின் உத்தரவை சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே பின்பற்றின.இந்நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யுஜிசி நிர்வாகம் வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தரவிட்டது. ஒருவேளை அத்தகைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், அதை செய்யத் தவறிய பல்கலைக்கழங்களின் பெயர்கள் தனது இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் யுஜிசி எச்சரித்தது.

Related