சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை 26 வாரங்களாக உயர்வு

பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு
விடுமுறை, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் மசோதாவுக்கு மக்களவையும் ஒப்புதல் அளித்தது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்து வதற்கான பேறுகால சலுகைகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், வியாழனன்று முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் மசோதாவுக்கு மக்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 18 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
இதுகுறித்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “சர்வதேச மகளிர் தினத்துக்கு அடுத்த நாளில், பெண்களுக்கு அளிக்கப்படும் பணிவான பரிசு இதுஎன்றார்.
10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும். அதே நேரத்தில் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இந்த 26 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே 50 மற்றும் 44 வாரங்கள் மகப்பேறு விடுமுறை அளிப்பதை அடுத்து, இந்தியாவும் பெண்களுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான சட்டத்தை இயற்றியுள்ளது.
மோடி பெருமிதம்

இந்நிலையில், “மக்களையில் இந்த மசோதா நிறைவேறிய நேரம், பெண்கள் முன்னேற்றுக்கான நமது முயற்சியில் வரலாற்றுத் திருப்புமுனை ஏற்படுத்தும் தருணம்என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.aa

Related