TAM-NEWS

தமிழக கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கருத்து

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கடந்த 5 நாட்களாக இரவு,
பகல் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், ஓரிரு நாளில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறியும் போராட்டம் கைவிடப்படவில்லை. வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட பின்னர்தான் தங்களது போராட்டம் நிறுத்துப்படுவது, தொடர்வது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் மாணவர்களும், இளைஞர்களும்.

தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னேற மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழக மக்களின் பண்பாட்டைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார். 

Related