மொபைல் போன் பயன்படுத்துவோரை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி,:மொபைல் போன் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை சரிபார்க்கும் வழிவகைகளை காணுமாறு, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில், லோக் நிதி என்ற தொண்டு நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 
ஆய்வு செய்ய, வழி

நாட்டில், மொபைல் போன் நாள் அதிகரித்து வருகிறது. மொபைல் போன்பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நாளுக்கு மூலம், பல வழிகளில், தகவல்கள் பரப்பி வருகின்றனர். இவர்கள் வழங்கும் தகவல்கள், உண்மைதானா என, தெரியவில்லை. 
அதனால், மொபைல் போன் பயன்படுத்துவோரை ஆய்வு செய்ய, வழி காண வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.இந்த மனு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 
15 நாட்களில்


அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவது உண்மை தான். மேலும், மொபைல் போன், பேசுவதற்கு மட்டுமின்றி, பணப் பரிமாற்றம் உட்பட, பல சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதனால், மொபைல் போன் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை திரட்டவும், சரிபார்க்கவும், வழி காண வேண்டியது அவசியம். இது பற்றி, 15 நாட்களில், மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 

Related