தமிழனை புகழும்’ சர்வதேச தொலைக்காட்சிகள், தமிழனின் ஒற்றுமையை கண்டு அகிலமே வியந்த நிகழ்வுகள்…

‘தமிழனை புகழும்’ சர்வதேச தொலைக்காட்சிகள், தமிழனின் ஒற்றுமையை கண்டு அகிலமே வியந்த நிகழ்வுகள்…
தமிழ் நாட்டில் ஏதாவது விரும்பத்தகாத, அசாதாரண தவறுகள் நிகழும்போது, தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவற்கொரு குணம்
உண்டு என்ற கவிதை வரிகளை சொல்லி கேலி பேசுவதுண்டு.
ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டம், தமிழர் என்ற இனத்தையும் அதன் குணத்தையும் உலகத்திற்கே பறைசாற்றி உள்ளது.
வரலாற்றில் இது போன்ற ஒரு அமைதியான பிரம்மாண்ட போராட்டம் நடந்ததே இல்லை என்று பலரும் போற்றுகின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுப்பு, தனிப்பட்ட தலைமை இல்லாமை, கடுகளவும் வன்முறைக்கு இடம் கொடுக்காத கட்டுப்பாடு, காவல் துறையின் பணிகளுக்கு ஒத்துழைப்பு, குப்பைகளை தாமே அகற்றுதல் என காந்தியடிகள் சொன்ன அனைத்து அஹிம்சையின் அம்சமும் இங்கே நிறைந்து கிடக்கிறது.
ஆயுதத்தால் சாதிக்க முடியாததை அமைதி சாதிக்கும் என்று, இளைஞர்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இந்த போராட்டத்தின் பின்னால் ஒட்டு மொத்த தமிழகமும் அணிவகுத்து நிற்கிறது.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், ஆங்காங்கே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை தொடங்கி விட்டனர்.
சர்வதேச தொலைக்காட்சிகள் இதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து விட்டன.
இளைஞர்களின் சக்தி எதிர்காலத்தில் இந்தியாவை வல்லரசாக்கும் என்று அப்துல் கலாம் கண்ட கனவை, நனவாக்கும் முதல் புள்ளி தமிழகத்து இளைஞர்களால் வைக்கப் பட்டது என்பதை வரலாறு பதிவு செய்யும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவிக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை தமிழக இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்த வண்ணம் உள்ளனர்.
மலையாள, கன்னட, தெலுங்கு இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து இளைஞர்களின் மெரினா போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் இனி அந்தந்த இடங்களில் இவர்களுக்காக ஆதரவு போராட்டங்கள் நடத்தும் நிலை உருவாகி வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக காவலர்களே, இளைஞர்களை போற்றி புகழ்கின்றனர். சீருடை மட்டும் இல்லை என்றால் நாங்களும் உங்களோடு அமர்ந்து விடுவோம் என்று மன ஆற்றாமையுடன்தான் காவலர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் வெளிப்படையாகவே பேசிவிட்டார்.
அரசியல்வாதிகள் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கை இழந்த மக்கள்- அமைதி, சத்தியம், ஒழுக்கம் என்ற நிலையில் இருந்து வழுவாமல் போராடும் இந்த இளைஞர்களை, மக்கள் நேசிக்கத் தொடங்கி விட்டனர்.
அதனால்தான், ஆயிரக்கணக்கானவர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம், இன்று லட்சக் கணக்கானவர்களை தனக்குள் உள் வாங்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
கடந்த 2015 ம் ஆண்டு வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகமே திக்குமுக்காடிய பொது, போலீசை, ராணுவத்தை, அரசாங்கத்தை எதிர் பார்க்காமல், தாமாகவே முன்வந்து பலரது உயிரையும் உடமையை மீட்டுக் கொடுத்தது இந்த இளைஞர் சமுதாயம்தான்.
இந்தியாவின் பல இடங்களில் மழை வெள்ள பேரிடர் மீட்பில் பங்கேற்று இருக்கிறோம். ஆனால் யாரையும் எதிர் பார்க்காமல், பலர் தாமாகவே மீட்பு பணியில் இறங்குவதையும், எங்களுக்கு உதவுவதையும் இதுவரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பார்த்ததே இல்லை என்று, 2015 ம் ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தின் பொது மீட்பு பணியில் பங்கேற்ற தேசிய பேரிடர் மீட்பு படை உயர் அதிகாரி.
இந்தப் பாராட்டுக்கு முழுவதும் உரித்தானவர்கள் இளைஞர்கள் மட்டுமே. இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமது அமைதியின் மூலம் கட்டிப் போட்டிருப்பதும் இளைஞர்கள்தான் தான்.
இதற்குத்தானே காந்தியும் கலாமும் கனவு கண்டார்கள். அந்தக் கனவு நனவாக, முதல் பாதையை தமிழ் இளைஞர்கள் அமைத்து விட்டனர்.
‘இதுதாண்டா தமிழன்’ என்று தமிழன் என்ற இனத்தையும், தனியான அவனது குணத்தையும் உலகம் உணராத தொடங்கி விட்டது.
இதுவரை நடந்த நிகழ்வுகளாகட்டும், அல்லது தற்போது உலகமே கண்டு வியக்கும் போராட்டமாகட்டும் நிச்சயம் தமிழகம் வரலாறு காணாத மாபெரும் போராட்டம் இது என்றால் மிகையல்ல. இந்த போராட்டத்தின் பலத்தை கண்டு தமிழகத்தை திரும்பி கூட பார்க்காத அனைத்து ஆங்கில சேனல்களும் தற்போது இந்த போராட்டத்தை கடந்த இரண்டு நாட்களாக முழுநேரம் ஒளிபரப்பி வருகின்றன. கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க நேரலை ஒளிபரப்பு செய்யும் வடஇந்திய மற்றும் சர்வதேச சேனல்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருகிறது.
உலக அளவிலான நிறுவனமான பிபிசி BBC கூட இந்த செய்திக்கு முக்கியவத்தும் கொடுத்து முழுநேர ஒலிபரப்பு செய்கிறது. எனவே இந்த வரலாறு காணாத போராட்டத்தால் இந்திய அரசு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் தமிழன். மேலும் தமிழனின் இந்த ஒற்றுமையைக்கண்டு உலகமே வியக்கிறது, உலகத்துக்கே தமிழனின் இந்த ஒற்றுமையை பறைசாற்றுகிறது சர்வதேச ஊடகங்கள்.
”நானும் தமிழனென்பதில் கர்வம் கொள்கிறேன்”

Related