TAM-NEWS

பள்ளிக்கல்வித் துறை செயல்பாடு சரியில்லை -உயர் நீதி மன்றம் கடும் அதிருப்தி

அரசுப்பள்ளிகளுக்கு கழிப்பறை வேண்டும் என்று வழக்குரைஞர்கள் கேட்கிறார்கள். வழக்குப் போடுகிறார்கள். இது வரை எந்த அரசுப்பள்ளி ஆசிரியரோ, ஆசிரியர் சங்க தலைவரோ இதற்கெல்லாம் வழக்குப் போட்டதாகவோ போராட்டம் செய்ததாகவோ தெரியவில்லை. இப்படி
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் போது கூட ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு கழிப்பறை வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் ஆசிரியர்களின் போராட்டக் கோரிக்கைப் பட்டியலில் இல்லை. அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழைக்குழந்தைகளின் பெற்றோர்கள் எதையும் கேட்பதற்கு வழியற்றவர்கள் என்பதால் தான் அரசுப்பள்ளிக் குழந்தைகள் கழிப்பறை கூட இல்லாத பள்ளிகளில் படித்துவிட்டு வரும் அவல நிலை உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அட்டேச் பாத்ரூம் உடன் வீடு கட்டும் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள். இனிமேல் அரசாங்கப் பள்ளிகளிலும் வகுப்பறையுடன் இணைந்த கழிப்பறைகள் அமைக்கப்படவேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் நிலை வரவேண்டும். எனது மகன் ஒரு அரசுப்பள்ளியில் படிக்கும் போது மதிய உணவைக் குறைவாகக் கொடுங்கள் என்று கேட்டான். ஏன்? என்று கேட்டபோது டாய்லட் வந்தால் எங்கள் பள்ளிக்கூடத்தில் டாய்லட் ரூமுக்குள் போக முடியாது என்று கூறினான். ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்திலும் அப்பொழுது மூன்று ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். பாவம் அரசுப்பள்ளிக் குழந்தைகள். நீதி மன்றம் குற்றம் சொல்லியிருப்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமல்ல கல்வித்துறையில் முக்கியமான அங்கமாக இருக்கும் அன்றாடம் 8 மணி நேரம் அரசுப்பள்ளிக் குழந்தைகளின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

Related