TAM-NEWS

உயர் நீதிமன்ற பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

'உயர் நீதிமன்ற நீதிபதி உதவியாளர் உட்பட, 391 பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நவ., 14 முதல், 17 வரை நடக்கும்' என, அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு வகை பதவிகளில், 391 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, ஆக., 27, 28ம் தேதிகளில் நடந்தது. தேர்வில் நேர்முக உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிக்கு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 14 மற்றும், 15ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. மற்ற பதவிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தேர்வர்களின் தரவரிசை பட்டியல் உள்ளிட்ட விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related