சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு

வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,
அறிவுறுத்தி உள்ளது.பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, எவ்வகை படிப்பு என்பது குறிப்பிடப்படுவது இல்லை. மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழில் மட்டுமே,

நேரடி படிப்பு அல்லது தொலைநிலை கல்வி என, குறிப்பிடப்படுகிறது. பட்ட சான்றிதழில் இக்குறிப்புகள் இருக்காது. இந்நிலையில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழ் வழங்கும் போது, மாணவரின் படிப்பு முறை, நேரடி வகுப்பா அல்லது தொலைநிலை கல்வியா என்பதை குறிப்பிட வேண்டும்' என, தெரிவித்து உள்ளது.

Related