TAM-NEWS

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்



கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்அவருக்கு வயது 90. 
கியூபா தலைநகரான ஹாவானாவில் காலமானார்.

உலகத் தலைவர்களிலேயே கொலை முயற்சிகளுக்கு மிக அதிக அளவில் 
ஆளாளனவர் காஸ்ட்ரோதமது வாழ்நாளில் 638 கொலை முயற்சிகளை காஸ்ட்ரோ சந்திக்க நேரிட்டதுஅமெரிக்காவின் தெற்கு கடல் பகுதியில் சுமார் 100 கி.மீதொலைவில் உள்ளது கியூபா. 1959ல் காஸ்ட்ரோ கியூபா அதிபரானாதும் அவரை தன்வசப்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்சி தோற்றதுபதவியில் இருந்து காலம் முழுவதும் அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளராக விளங்கினார் காஸ்ட்ரோ

இவர் வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார்சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டு இருந்தார்.இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்பிடல் காஸ்ட்ரோ மரணத்தை அதிபரும் அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

1926ல் கியூபாவில் கோல்குயின் மாகாணத்தில் விவசாய குடும்பத்தில் காஸ்ட்ரோ பிறந்தார். 1945ல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்கல்லூரி பயிலும்போதே அரசியலில் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டார்.



Related