TAM-NEWS

இன்று தேசிய குழந்தைகள் தினம்

குழந்தைகள் நலத்தை பேணிக்காக்கும் விதமாகவும், நாட்டின் முதல் பிரதமரான நேருவை நினைவுபடுத்தும் விதமாகவும், அவரது பிறந்த தினமான நவ., 14ல் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளும் அவர்
மீது பற்று வைத்திருந்தனர். நேரு, குழந்தைகளால் 'நேரு மாமா' என அழைக்கப்பட்டார்.அவர் பிரதமராக இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம் அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். ..டி., -..எம்., மற்றும் எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இவரது ஆட்சிக்காலத்தில் தான் தொடங்கப்பட்டன. அலுவலகப் பணியின் போது, குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத்தருவது பெற்றோர், ஆசிரியரின் கடமை. மற்ற குழந்தைகளுடன் பழகுதல், உதவும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்க வேண்டும். நாளை தலைவர்களான குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவர்களின் லட்சியக் கனவை நிறைவேற்றுவதே ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை.-இன்று தேசிய குழந்தைகள் தினம்

Related