TAM-NEWS

500, 1000 நோட்டுக்களை என்ன செய்வது? மாற்ற முடியுமா?

08.11.2016 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பழைய நோட்டுகளை நவம்பர் 10ஆம் தேதி முதல் வங்கிகள், தபால்
நிலையங்களில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். டிசம்பர் 30ஆம் தேதி இதற்கு கடைசி நாளாகும். பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு அடையாள அட்டை அவசியம்.


நவம்பர் 11ஆம் தேதி அரசு மருத்துவமனை, விமான நிலையங்கள், ரயில் டிக்கெட் பெறும்போது, பெட்ரோல் பங்க் ஆகியவைகளில் மட்டும் 1000, 500 நோட்டுகள் பெற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related