TAM-NEWS

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தானது மேலும் 4 வாரங்களுக்குத் தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தானது மேலும் 4 வாரங்களுக்குத் தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உள்ளாட்சி அமைப்புகளில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை
எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தானது நான்கு வாரங்களுக்கு தொடரும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் திமுக மற்றும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related