TAM-NEWS

அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறைப்பு !பஞ்சாப் நேஷனல் பேங்க்: அரசு ஊழியர்களுக்கு சலுகை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து சலுகை வழங்குவதாக
பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.


ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி, சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்திய வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் இணைந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு வருட கால அளவுக்கான வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதம் 9.3 சதவிகிதமாக தற்போது நிர்ணயித்துள்ளது. அதேபோல, நிலையான விகித அடிப்படையில் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதமாக 9.8 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.


ஒரு வருடத்துக்கு மேலான கால அளவுடைய வாகனக் கடன்களுக்கு 9.55 சதவிகிதம் வட்டி விகிதம் நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி விகிதச்சலுகை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இதுதவிர, ஆவணங்கள் சரிபார்ப்புக் கட்டணம், செயல்பாட்டு கட்டணம் ஆகிய கட்டணங்களிலிருந்தும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related