TAM-NEWS

உலக கோப்பை கபடியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனை .

அகமதாபாத்தில் நடைபெற்ற  உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய - ஈரான் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியா 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி கோப்பையை
வென்றது.


ஏற்கனவே 2004, 2007ம் ஆண்டு  இறுதிபோட்டிகளிலும் இவ்விரு அணிகளுமே மோதின. இருபோட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று ஹாட்ரிக்  சாம்பியன்  என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related