நம் நாட்டில் தேர்தலின்போது வெளி மாநிலம், வெளி
மாவட்டங்களில் வேலைபார்க்கும் மக்கள் ஓட்டுப் போடுவதில்
சிரமும் குழப்பமும் ஏற்படுகிறது. இந்நிலையில், பல மக்கள் வெளிநாட்டுக்கு
பணி
நிமித்தமாக அங்கேயே வசிக்க வேண்டியநிலை
உள்ளது. அவர்கள் ஓட்டளிக்கும் நிலை
கேள்விக்குறியாக உள்ளது. எனவே, வெளிநாடுகளில்
வாழும்
இந்தியர்களுக்கு,
'இ - ஓட்டிங்' மூலம் ஓட்டளிக்கும் உரிமை
வழங்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து
வருகிறது.
வெளிநாடுகளில்,
ஒரு கோடிக்கும் அதிகமான என்.ஆர்.ஐ.,க்கள் வசித்து
வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள், குறிப்பிட்ட ஐந்து
நாடுகளில் வசிக்கின்றனர். அதில் அதிகபட்சமாக, சவுதி
அரேபியாவில், 17.8 லட்சம் பேரும், ஐக்கிய
அரபு எமிரேட்டில், 17.5 லட்சம் பேரும், பிரிட்டனில்,
15 லட்சம் பேரும் வசிக்கின்றனர். அமெரிக்காவில்,
9.2 லட்சம் பேரும், ஓமனில், 7.1 லட்சம்
பேரும் வசிக்கின்றனர்.
இந்நிலையில்,
என்.ஆர்.ஐ.,க்கள்
பாஸ்போர்ட்டுடன் நேரடியாக வந்தால் மட்டுமே இந்தியாவில்
நடக்கும் தேர்தலில் ஓட்டளிக்க முடியும். தேர்தல் ஆணையத்தின் தகவல்படி
11,846 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
எனவே அவர்களுக்கு 'இ - ஓட்டிங்' முறையில்
ஓட்டுப்போடும் உரிமையை அளிக்க தேர்தல்
ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் அவர்கள் சிரமமின்றி
எளிதாக ஓட்டுப் போட முடியும்.
மேலும்
தேர்தலில் ஓட்டளிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த ஆய்வுகள், போட்டிகள், நடத்தவும் பரிசுகள் வழங்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த யோசனைகளுக்காக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக
அறிவியல் கல்வி மையத்துடன் தேர்தல்
ஆணையம் இணைந்து இதுகுறித்தான பணிகளை
மேற்கொள்ளவுள்ளது. இந்த மையம், என்.ஆர்.ஐ.,க்கள்
தொடர்பான ஆய்வை நடத்தி, அரசிடம்
அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையில் கூறப்படும்
பரிந்துரைகளின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில்
செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து மத்திய அரசு முடிவுசெய்யும்.
மக்கள்
மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்'
என இணையதளத்தில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான பிரச்சாரப் பாடல், சுலோகன் எழுதுதல்
போன்ற போட்டிகளை தேர்தல் ஆணையம் நடத்தும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, 2017 ஆம் ஆண்டு
ஜனவரி 25ஆம் தேதி தேசிய
ஓட்டுப்பதிவு தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும்.
கடந்த
2015 ஆம் ஆண்டு, அபுதாபியில் வசிக்கும்
பஷீர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல
வழக்கு தொடர்ந்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த
முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது