தகுதியும்,
திறமையும் உள்ள சுற்றுலா கைடுகளுக்கு
மட்டும் இந்த ஆண்டு முதல்
உரிமம் வழங்க சுற்றுலாத்துறை முடிவு
செய்துள்ளது.சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா
கைடுகளுக்கான உரிமம் புதுப்பித்து கொடுப்பது
வழக்கம்.
பல இடங்களில் இந்த கைடுகளின் நடவடிக்கைகள்
திருப்தியளிக்கவில்லை. இது தொடர்பாக வௌிநாட்டு
பயணிகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடந்து தகுதியும், திறமையும்
உள்ள நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கினால்
போதும் என அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில்
சென்னை மற்றும் மதுரையில் இது
தொடர்பாக நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. தென்மாவட்ட அளவில், 110 கைடுகள் பங்கேற்கும் நேர்காணல்
நேற்று மதுரையில் நடந்தது.
இதில் அவர்களின் மொழி அறிவு மற்றும்
சுற்றுலா தலங்கள் தொடர்பான கேள்விகள்
கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்கள்
தேர்வு செய்யப்பட்டு, உரிமம் வழங்கப்படும்.