சிறப்பு
ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான
பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில்
மாற்றப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில், கலை, ஓவியம், தையல்,
இசை, கணினி அறிவியல், கைவினை,
தோட்டக்கலை உள்ளிட்ட
பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் பகுதி நேர
சிறப்பு ஆசிரியர்களும், 5,000த்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்களும் உள்ளனர்.
இதில் சேர, பிளஸ் 2 முடித்து,
அரசு தேர்வுத் துறை நடத்தும், தொழில்நுட்ப
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்,
மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும், டி.டி.சி.,
என்ற, ஆசிரியர் பயிற்சி படிப்பில், சான்றிதழ்
பெற வேண்டும். இத்தேர்வுக்கு, 1976ல் பாடத்திட்டம் கொண்டு
வரப்பட்டது. தற்போது, நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட
நிலையில், அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வித் துறையை,
அரசு தேர்வுத் துறை வலியுறுத்தியது. இதையடுத்து,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவுப்படி, புதிய
பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் நடக்கும்
தேர்வை மட்டும், பழைய பாடத்திட்டத்தில் நடத்தி
விட்டு, அடுத்த ஆண்டுக்கான தேர்வை,
புதிய பாடத்திட்டத்தில் மேற்கொள்ள, அரசு தேர்வுத் துறை
முடிவு செய்துள்ளது.