தமிழகத்தில்
நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய
குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும்
விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கடந்த சில வருடங்களாக புதிய
குடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில்
உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறு
கால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்ப
அட்டை கள் மூலம் டிசம்பர்
மாதம் வரை மட்டுமே பொருட்கள்
வாங்க முடியும்.
இனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள்
வழங்க அரசு திட்டமிட்டு தேவையான
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி
மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு
மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன்
கடை களிலும் நவீன எலக்ட்ரானிக்
கருவி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்
வருகிற 1-ந்தேதி முதல் புதிய
குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும்
விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்
ணப்பிக்க வேண்டும்.
பொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து,
புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில்
வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும்
போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும்
திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்
பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான
பணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப்
பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்று
வருகின்றன
இவ்வாறு
அந்த அதிகாரி தெரிவித்தார்.