ஊராட்சி பதவிகளுக்கு வண்ண ஓட்டுச்சீட்டு

ஊராட்சி தேர்தலில், நான்கு பதவிகளுக்கு, வண்ண ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படஉள்ளது


கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வாக்காளர்கள், நான்கு ஓட்டு போட வேண்டும்.கடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, 'பிங்க்' நிறம்; ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, வெள்ளை அல்லது நீலம்; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, பச்சை; மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு, மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டுகள்அச்சிடப்பட்டன. இந்த உள்ளாட்சி தேர்தலிலும், வண்ண ஓட்டுச்சீட்டுகளை அச்சிட, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Related