TAM-NEWS

அரசு இணையதளங்களை 'அப்டேட்' செய்ய உத்தரவு

சிவகங்கை: 'அரசு இணையதளங்களை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 'அப்டேட்' செய்ய வேண்டும்' என, மாநில அரசுகளை, மத்திய அரசு
கேட்டுக் கொண்டுள்ளது.

ஆய்வில் தகவல் : மத்திய, மாநில அரசு இணையதளங்களை, மத்திய அரசு நிறுவனமான, 'ஸ்டண்டர்டிசேஷன் டெஸ்டிங் அண்ட் குவாலிட்டி சர்ட்டிபிகேஷன்' எனும், எஸ்.டி.க்யூ.சி., கண்காணிக்கிறது. அந்த நிறுவனத்தின் ஆய்வில், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், அரசு இணையதளங்கள், 'அப்டேட்' செய்யாதது தெரிய வந்துள்ளது.

மாவட்ட இணையதளங்கள், எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்பதை கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில், அரசு இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் என, மாநில அரசுகளை, எஸ்.டி.க்யூ.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

இணையதளங்களை குறைந்தது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது, 'அப்டேட்' செய்ய வேண்டும்; மாவட்ட இணையதளங்களில் மாநிலத்தை தெரிந்து கொள்ளும் வகையில், 'எம்பளம்' இடம் பெற வேண்டும்.

115 விதிமுறைகள் : மக்களுக்கு பயன்பெறும் மற்ற இணையதள முகவரிகளின், 'லிங்க்'குகள் இருக்க வேண்டும் என்பது உட்பட, 115 விதிமுறைகளை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட, அரசு துறைகளின் இணையதளங்கள் என்..சி., எனப்படும், தேசிய தகவல் மையம் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

Related