TAM-NEWS

💥💻கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்😭💥*

*'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில்*, கணினி ஆசிரியர்களை நியமிக்கா மலும், *கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும்*💥 பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

*💥தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில்,
கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.*

💥பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
பிறகு பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம் பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.*💥 இவர்களுக்கு, *📚தமிழகபள்ளிகளில் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை😍*.

வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், *கணினி அறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்க வில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.

ஆன்லைன் படிப்புக்கும், .சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த உள்ளது.

*தமிழக அதிகாரிகள், மெத்தனத்தால், .சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும்* அபாயம் உள்ளது. *பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன் இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டு உள்ளன;* அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில துணை அமைப் பாளர் *.முத்துவடிவேல்* கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல் பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''*😂 என்றார்.

*தினமலர்*

Related