பி.எட்., படிப்புக்கான மாணவர்
சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்.,படிப்புகளுக்கு, 670
தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசுமற்றும்
அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும்,
கடந்த மாதம்இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசின்
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், நிரம்பாத காலி இடங்களுக்கு, இரண்டாம்
கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது; இன்றுடன்
முடிகிறது. இந்நிலையில், அனைத்து தனியார், பி.எட்., கல்லுாரிகளிலும், இன்றுடன்
மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, நேற்று மாலை,
திடீர் அறிவிப்பை வெளியி ட்டுள்ளது;
இதனால்,
தனியார் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 'எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென மாணவர்
சேர்க்கையை நிறுத்த உத்தரவிட்டால், கல்லுாரிகளை
எப்படி நடத்துவது; மாணவர் சேர்க்கைக்கு, மேலும்,
இரு வாரம் அவகாசம் வழங்க
வேண்டும்' என, தனியார் கல்லுாரிகள்
கோரிக்கை விடுத்துள்ளன.