TAM-NEWS

+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்கஅரசு பள்ளிகளுக்குகல்வித் துறை அதிகாரிகள், 'கெடுவிதித்துள்ளனர்பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,காலாண்டு தேர்வு நடந்து வருகிறதுவரும்,
24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


தற்போதைய நிலையில்அனைத்து அரசு பள்ளிகளிலும்பிளஸ் 2 மாணவர்களுக்குமுக்கிய பாடப்பிரிவின்முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளனகாலாண்டு தேர்வு முடிந்ததும்அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்குஇரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


டிசம்பர் மாதத்திற்குள்இந்த இலக்கை அடைந்து விட்டால்அரையாண்டு தேர்வுக்கு பின்பொதுத் தேர்வு வரும் வரைதினசரி திருப்புதல் தேர்வுகள்வைத்துமாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் எனஅறிவுரை வழங்கப்பட்டு உள்ளதுஇதற்கிடையேதனியார் பள்ளிகளில்பிளஸ் 1 வகுப்பிலேயேபிளஸ் 2 பாடங்களை நடத்துவதால்அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளனகாலாண்டு தேர்வு முடிந்ததும்பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்ததனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

Related